ஆடு வளர்ப்பு in Tamil

 

வெள்ளாடு வளர்ப்பு

வெள்ளாடு “ஏழைகளின் பசு” என்று அழைக்கப்படுகிறது. இது மானாவாரி நிலம் சார்ந்த பண்ணையத் தொகுப்பின் முக்கிய அங்கம் ஆகும். மேட்டுப்பாங்கான, நிலங்களில் பசுக்களையும், எருமைகளையும் வளர்க்க இயலாது. எனவே இத்தகைய சூழலுக்கு ஆடுவளர்ப்பு உகந்தது. ஆடு வளர்ப்பில் குறைந்த முதலீட்டைக் கொண்டு நல்ல லாபம் பெறலாம்.
யார் தொடங்கலாம்?
  • நிலமற்ற மற்றும் குறுநில விவசாயிகள்.
  • மானாவரி மேய்ச்சல் நிலங்கள் உள்ள இடங்கள்


நன்மைகள்
  • ஆடு வளர்ப்பு அனைத்துச் சூழலுக்கும் ஏற்றதாகும். அதிகப் பராமரிப்பு தேவையில்லை. சிறிய இடம் மற்றும் எளிய கொட்டகை போதுமானது.
  • குறைந்த முதலீடு மற்றும் உடனடி வருவாய்
  • வெள்ளாட்டிலிருந்து பால் மற்றும் கறி ஆகிய இரண்டிலிருந்தும் வருமானம் கிடைக்கிறது.
  • ஒரு ஆட்டிலிருந்து சராசரியாக 22-30 கிலோ கறி கிடைக்கின்றது. அனைத்து விதமான மக்களும் உண்ணக் கூடிய இறைச்சி.
  • அதிகமான குட்டிகளை ஈனும் விகிதம். ஒவ்வொரு முறையும் சராசரியாக 2-3 குட்டிகளை ஈனுகிறது
  • நல்ல எரு கிடைக்கிறது.
  • வருடம்முழுவதும்வேலை


வெள்ளாட்டு இனங்கள்
சிறந்த இந்திய இனங்கள்
ஜம்நாபாரி - எட்டாவா மாநிலம், உ.பி
பீட்டல் - பஞ்சாப்
பார்பரி - உ.பி.யின் மதுரா மற்றும் ஆக்ரா பகுதிகள்
தெல்லிச்சேரி மற்றும் மலபாரி - வடகேரளா
சுர்தி - குஜராத்
காஷ்மீரி - ஜம்மு காஷ்மீர்
வங்காள ஆடு - மேற்கு வங்காளம்
இந்திய சூழலுக்கு ஏற்ற அயல்நாட்டு இனங்கள்
அங்கோரா, ஆல்பைன், சேனன், டோகன் பர்க், ஆங்ளோ நுபியன்


வெள்ளாடு இனங்களை தேர்வு செய்தல்
ஜமுனாபாரி.
  • நல்ல உயரமானவை
  • காதுகள் மிக நீளமனவை
  • ரொமானிய மூக்கமைப்பு கொண்டவை.
  • கிடா 65-85  கிலோ பெட்டை - 45-60 கிலோ.
  • பெரும்பாலான ஆடுகள் ஒரு குட்டியே மட்டும் ஈனும்
  • 6 மாத குட்டிகளின் எடை 15 கிலோ.
  • தினம் 2- 2.5 லிட்டர் பால் கொடுக்கும் திறன்
தலைச்சேரி / மலபாரி
  • வெள்ளை , பழுப்பு மற்றும் கருப்பு நிறங்கள்
  • 2-3 குட்டிகளை போடும் திறன்
  • கிடா - 40-50 கிலோ பெட்டை - 30 கிலோ.
போயர்
  • இறைச்சிக்காக உலகம் முழுவதும் வளர்க்கப்படுகிறது.
  • வேகமான வளர்ச்சி திறன் கொண்டவை.
  • கிடா - 110-135 கிலோ பெட்டை - 90-100 கிலோ.  
  • குட்டிகள் 90 நாட்களில் 20-30 கிலோ இருக்கும்


வெள்ளாடுகளை தேர்வு செய்தல்
பெட்டை ஆடுகள்
  • 2-3 குட்டிகள் ஈனும் திறன்
  • 6-9 மாதங்களில் பருவமடையும் தன்மை
கிடாக்கள்
  • தோற்றத்தில் உயரமாகவும், நெஞ்சு பாகம் அகன்றதாகவும், உடல் பாகம் நீண்டதாகவும் இருக்கவேண்டும்
  • 9-12 மாதங்களில் பருவமடையும் தன்மை
  • நல்ல எடையுள்ள குட்டிகளை 6 மாத வயதில் தேர்வு செய்யவேண்டும்
  • 2-3 குட்டிகளை ஈனும் பெட்டையாட்டிலிருந்து


தீவனப் பாரமரிப்பு
  • வெள்ளாடு மேய்ச்சல் மற்றும் அடர்தீவனம் கொண்டு பராமரித்தால் அதிக பட்சம் வளர்ச்சி கிடைக்கும்.
  • கொளுக்கட்டை புல் , ஸ்டைலோ மற்றும் கோ ரகத் தீவன பயிர்களை அளிக்கலாம்.
  • தீவன மர இலைகளான அகத்தி, சூபாபுல், கிளைரிசிடியா போன்றவற்றை வயல் ஓரங்களில் வளர்த்து அளிக்கலாம்.
  • ஒரு ஏக்கரில் வளரும் தீவன மரம் மற்றும் தீவனப் பயிர்களை கொண்டு 15-30 ஆடுகள் வரை வளர்க்கலாம்.
  • அடர் தீவனம் கீழ்கண்டவாறு தயாரிக்கலாம்.
 
குட்டி தீவனம்
வளரும் ஆட்டு தீவனம்
பால் கொடுக்கும் ஆட்டு தீவனம்
சினை ஆட்டு தீவனம்
மக்காசோளம்
37
15
52
35
பருப்பு வகைகள்
15
37
---
---
புண்ணாக்கு
25
10
8
20
கோதுமை தவிடு
20
35
37
42
தாது உப்பு
2.5
2
2
2
உப்பு
0.5
1
1
1
மொத்தம்
100
100
100
100
  • குட்டிகளுக்கு தினம் 50-100 கிராம் வரை அடர் தீவனம் 10 வாரங்களுக்கு அளிக்க வேண்டும்
  • வளரும் ஆடுகளுக்கு தினம் 100-150 கிராம் வரை அடர் தீவனம் 3-10 மாதங்களுக்கு கொடுக்க வேண்டும்
  • சினை ஆடுகளுக்கு தினம் 200 கிராம் அடர்தீவனம் கொடுக்க வேண்டும்
  • தினம் ஒரு கிலோ பால் கொடுக்கும் ஆடுகளுக்கு 300 கிராம் வரை அடர்தீவனம் கொடுக்கலாம்.
  • அதிகம் தாமிர சத்து உள்ள வெள்ளாடுகளுக்கான தாது உப்பு கட்டிகள் கொட்டிலில் தொங்கவிட வேண்டும்


இனபெருக்கப் பாரமரிப்பு.
  • இலாபகரமாக இருக்க ஆடுகள் 2 வருடத்தில் 3 முறை குட்டிகள் ஈன வேண்டும்
  • வேகமாக வளரும் தன்மை மற்றும் அதிக எடை கொண்ட ஆடுகளை இனபெருக்கத்திற்கு பயன்படுத்தவேண்டும்
  • பெட்டை ஆடுகளை 1 வருட வயதில் இனபெருக்கத்திற்கு பயன்படுத்தவேண்டும்
  • குட்டி போட்ட 3 மாதத்திற்கு பிறகு இனச்சேர்க்கை செய்யவேண்டும். அப்போது தான் 2 வருடத்தில் 3 முறை குட்டிகள் ஈனும்
  • சினை பருவ காலம் 18-21 நாட்கள் இடைவெளியில் வரும். அது 24-72 மணி காலம் நீடிக்கும்.
  • சினை பருவ காலத்தில் பெட்டை ஆடுகள் வலி இருக்க மாதிரி ஓங்கி கத்தும். மேலும் வாலை ஆட்டி கொண்டிருக்கும். இனப்பெருக்க உறுப்புகள் சிறிது வீங்கியும் சிவந்தும் காணப்படும். இனப்பெருக்க உறுப்பிலிருந்து திரவம் ஒழுகவதால் வாலை சுற்றி ஈரமாகவும் அழுக்காகவும் காணப்படும்.சில ஆடுகள் தீனி திங்காமலும் சிறுநீர் அடிக்கடி கழித்து கொண்டு இருக்கும். சில சமயங்களில் மற்ற ஆடுகள் மீது ஏறும் அல்லது ஏற அனுமதிக்கும்
  • சினை பருவ அறிகுறிகள் தென்பட்ட 12-18 மணி நேரத்தில் கிடாவுடன் சேர்க்கவேண்டும்.
  • சில ஆடுகளில் சினைபருவ காலம் 2-3 நாட்கள் இருக்கும் எனவே அவற்றை இரண்டாவது தடவையாக 1 நாட்கள் கழித்து மீண்டும் கிடாவுடன் சேர்க்கவேண்டும்
  • சினை காலம் 145-150 நாட்கள்.


குடற் புழு நீக்கம்
  • ஒல்லியான மற்றும் பொலிவற்ற தோற்ற கொண்ட ஆடுகளில் குடற் புழு தாக்கம் இருக்கும். எனவே அந்த ஆடுகளை இனபெருக்கத்திற்கு முன் குடற் புழு நீக்கம் செய்யவேண்டும்.
  • சினை ஆடுகளை முதல் 2 மாத சினையில் குடற்புழு நீக்க செய்தால் கரு சிதைவு ஏற்பட வாய்ப்புண்டு.
  • சினை ஆடுகளை குட்டி போடுவதற்கு 2-3 வாரத்திற்கு முன் குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும்.
  • குட்டிகள் பிறந்த 30 நாட்களிலும் பிறகு 60 நாளிலும் குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும்


தடுப்பூசிகள்
  • துள்ளுமாரி நோய் மற்றும் டெட்னஸ் தடுப்பூசிகளை குட்டி போடுவதற்கு 4-6 வாரத்திற்கு முன்னும், இனபெருக்கத்திற்கு 4-6 வாரத்திற்கு முன்னும் போடவேண்டும்.
  • துள்ளுமாரி நோய் மற்றும் டெட்னஸ் தடுப்பூசிகளை குட்டிகளுக்கு பிறந்த 8 வது வாரமும், பிறகு 12 வது வாரமும் போடவேண்டும்.
  • கிடாக்களுக்கு வருடம் ஒரு முறை துள்ளுமாரி நோய் மற்றும் டெட்னஸ் தடுப்பூசிகளை போடவேண்டும்.


கொட்டகை பாரமரிப்பு
1.ஆழ்கூள முறை
  • தரையில் 6 செ.மீ. உயரத்திற்கு கடலைப்பொட்டு, மரத்தூள் மற்றும் நெல் உமி ஆகியவற்றை இட்டு வளர்க்கலாம்.
  • இரண்டு வாரத்திற்கு ஒரு முறை புது கூளம் போடவேண்டும்.
  • இம்முறையில் உண்ணி மற்றும் பேன் தாக்கம் இல்லாமல் கவனித்துக் கொள்ளவேண்டும்
  • ஆடு ஒன்றுக்கு 15 சதுர அடி இடம் தேவைப்படும்
2.உயர் மட்ட தரை முறை
  • தரையிலிருந்து 3-4 அடி உயரத்தில் மர பலகை அல்லது கம்பி வலைகளை கொண்டு அமைக்கலாம்
  • ஒட்டுண்ணி தொல்லைகள் மிகவும் குறைவாக இருக்கும்
       

                  


வளர்ப்பு முறைகள்
1.மேய்ச்சலுடன் கூடிய கொட்டகை முறை.
  • மேய்ச்சல் நிலங்கள் குறைவாக உள்ள இடங்களில் மேய்ச்சலுக்கு பிறகு கொட்டகையில் வைத்து பசுந்தீவனங்களையும், அடர் தீவனைத்தையும் அளிக்கலாம்.
2.கொட்டகை முறை.
  • வெள்ளாடுகளை நாள் முழுவதும் கொட்டகைக்கு உள்ளேயே அடைத்து தீவனம் அளித்து வளர்க்கப்படுகிறது.
  • கொட்டகையை ஆழ்கூளம் அல்லது உயர் மட்ட தரை முறையினால் அமைக்கலாம்


வெள்ளாடு காப்பீடு திட்டம்
  • நான்கு மாதம் வயது முதல் வெள்ளாடுகளை பொது காப்பீடு நிறுவனங்கள் மூலம் காப்பீடு செய்யலாம்.
  • விபத்து மற்றும் நோயினால் இறந்தால் காப்பீடு தொகையை கோரலாம்.

தலச்சேரி ஆடு


  • 3 மாதத்திற்கு 20Kg வரை எடை அதிகரிக்கும்.
  • 5 முதல் 6 மாதத்திற்குள் இனப்பெருகத்திற்கு தயாராகும்.
  • 2 லிட்டர் வரை பால் கொடுக்கக்கூடியது.
  • 2முதல் 3குட்டி வரை ஈன்றெடுக்கும்.
  • அருகம்புல், CO3, CO4, குதிரை மசாலா,வேலி மசாலா போன்றவற்றை உட்கொள்ளும்.
  • மேலும் இது உங்கள் இடத்தில் வளரும் பசுமையான தழைகளை உட்கொள்ளும்.
  • CO3, CO4  ஆகியவை இதன் எடை மற்றும் வளர்ச்சியை அதிகரிக்க செய்யும் உணவுகள்.
  • இது எல்லா ஊர்களின் சூழ்நிலைகளிலும் வாழும்,வளரும்.
  • இவைகளை உயரமான பட்டிகளில் அமைப்பது சிறந்தது.
  • தஞ்சாவூர் விலை உயிருடன் கூடிய எடை 310/Kg  (சுத்தமானது) பெண் ஆட்டிற்கு,  320/Kg (சுத்தமானது) ஆண் ஆட்டிற்கு.
  • மேலும், ஆடுகளின் டெலிவரிக்கு தேவையான வாகனங்கள் ஏற்பாடு செய்து தரப்படும்.
கிடைக்குமிடம் :
தஞ்சை மாவட்டம், திருவையாறு ஒன்றியம் தஞ்சை திருவையாறு சாலையில் கண்டியூர் சஹார ஃபார்ம்ஸில் கிடைக்கும். தொடர்புக்கு : 9443340341

 

 

 

லாபம் தரும் ஆடு வளர்ப்பு

வெள்ளாடு “ஏழைகளின் பசு” என்று அழைக்கப்படுகிறது. இது மானாவாரி நிலம் சார்ந்த பண்ணையத் தொகுப்பின் முக்கிய அங்கம் ஆகும். மேட்டுப்பாங்கான, நிலங்களில் பசுக்களையும், எருமைகளையும் வளர்க்க இயலாது. எனவே இத்தகைய சூழலுக்கு ஆடுவளர்ப்பு உகந்தது. ஆடு வளர்ப்பில் குறைந்த முதலீட்டைக் கொண்டு நல்ல லாபம் பெறலாம்.

யார் தொடங்கலாம்?
* நிலமற்ற மற்றும் குறுநில விவசாயிகள்.
* மானாவரி மேய்ச்சல் நிலங்கள் உள்ள இடங்கள்



சிறந்த இந்திய இனங்கள்
ஜம்நாபாரி - எட்டாவா மாநிலம், உ.பி
பீட்டல் - பஞ்சாப்
பார்பரி - உ.பி.யின் மதுரா மற்றும் ஆக்ரா பகுதிகள்
தெல்லிச்சேரி மற்றும் மலபாரி - வடகேரளா
சுர்தி - குஜராத்
காஷ்மீரி - ஜம்மு காஷ்மீர்
வங்காள ஆடு - மேற்கு வங்காளம்
இந்திய சூழலுக்கு ஏற்ற அயல்நாட்டு இனங்கள்
அங்கோரா, ஆல்பைன், சேனன், டோகன் பர்க், ஆங்ளோ நுபியன்
 ஆழ்கூள முறை
  • தரையில் 6 செ.மீ. உயரத்திற்கு கடலைப்பொட்டு, மரத்தூள் மற்றும் நெல் உமி ஆகியவற்றை இட்டு வளர்க்கலாம்.
  • இரண்டு வாரத்திற்கு ஒரு முறை புது கூளம் போடவேண்டும்.
  • இம்முறையில் உண்ணி மற்றும் பேன் தாக்கம் இல்லாமல் கவனித்துக் கொள்ளவேண்டும்
  • ஆடு ஒன்றுக்கு 15 சதுர அடி இடம் தேவைப்படும்

உயர் மட்ட தரை முறை

*தரையிலிருந்து 3-4 அடி உயரத்தில் மர பலகை அல்லது கம்பி வலைகளை கொண்டு அமைக்கலாம்
* ஒட்டுண்ணி தொல்லைகள் மிகவும் குறைவாக இருக்கும்


மேய்ச்சலுடன் கூடிய கொட்டகை முறை.
  • மேய்ச்சல் நிலங்கள் குறைவாக உள்ள இடங்களில் மேய்ச்சலுக்கு பிறகு கொட்டகையில் வைத்து பசுந்தீவனங்களையும், அடர் தீவனைத்தையும் அளிக்கலாம்.

கொட்டகை முறை.

  • வெள்ளாடுகளை நாள் முழுவதும் கொட்டகைக்கு உள்ளேயே அடைத்து தீவனம் அளித்து வளர்க்கப்படுகிறது.
  • கொட்டகையை ஆழ்கூளம் அல்லது உயர் மட்ட தரை முறையினால் அமைக்கலாம்
தீவனப் பாரமரிப்பு
*வெள்ளாடு மேய்ச்சல் மற்றும் அடர்தீவனம் கொண்டு பராமரித்தால் அதிக பட்சம் வளர்ச்சி கிடைக்கும்.

* கொளுக்கட்டை புல் , ஸ்டைலோ மற்றும் கோ ரகத் தீவன பயிர்களை அளிக்கலாம்.
* தீவன மர இலைகளான அகத்தி, சூபாபுல், கிளைரிசிடியா போன்றவற்றை வயல் ஓரங்களில் வளர்த்து அளிக்கலாம்.
* ஒரு ஏக்கரில் வளரும் தீவன மரம் மற்றும் தீவனப் பயிர்களை கொண்டு 15-30 ஆடுகள் வரை வளர்க்கலாம்.
* அடர் தீவனம் கீழ்கண்டவாறு தயாரிக்கலாம்.


குட்டி தீவனம்
வளரும் ஆட்டு தீவனம்
பால் கொடுக்கும் ஆட்டு தீவனம்
சினை ஆட்டு தீவனம்
மக்காசோளம்
37
15
52
35
பருப்பு வகைகள்
15
37
---
---
புண்ணாக்கு
25
10
8
20
கோதுமை தவிடு
20
35
37
42
தாது உப்பு
2.5
2
2
2
உப்பு
0.5
1
1
1
மொத்தம்
100
100
100
100

* குட்டிகளுக்கு தினம் 50-100 கிராம் வரை அடர் தீவனம் 10 வாரங்களுக்கு அளிக்க வேண்டும்
* வளரும் ஆடுகளுக்கு தினம் 100-150 கிராம் வரை அடர் தீவனம் 3-10 மாதங்களுக்கு கொடுக்க வேண்டும்
* சினை ஆடுகளுக்கு தினம் 200 கிராம் அடர்தீவனம் கொடுக்க வேண்டும்
* தினம் ஒரு கிலோ பால் கொடுக்கும் ஆடுகளுக்கு 300 கிராம் வரை அடர்தீவனம் கொடுக்கலாம்.
* அதிகம் தாமிர சத்து உள்ள வெள்ளாடுகளுக்கான தாது உப்பு கட்டிகள் கொட்டிலில் தொங்கவிட வேண்டும்


தண்ணீர்

       காலை ஒன்பது மணி அளவில் ஆடுகளை மேய்ச்சலுக்கு அனுப்பிவிட்டு, கொட்டகைகளை சுத்தம் செய்துவிட வேண்டும். பதினோரு மணி அளவில் ஆடுகளுக்கு அடர் தீவனம் கொடுக்க வேண்டும். பின் கடலைப் பிண்ணாக்கு ஊறவைத்த தண்ணீர் கொடுக்க வேண்டும். தோட்டங்களில் தேங்கி நிற்கும் தண்ணீரைக் குடிக்கவிட்டால் நோய்கள் தொற்ற வாய்ப்பு இருக்கிறது. அதனால் தண்ணீர் சுத்தமாக இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

மேய்ச்சல்

        வெயில் அதிகமாக அடிக்கும் மதிய நேரத்தில் ஆடுகளை மேய விடும் போது சோர்ந்து விடும். அந்த நேரங்களில் பட்டியில் அடைத்து விட்டு வேலிமசால், முயல் மசால், கோ-4, மாதிரியான பசுந்தீவனங்களை நறுக்கிப் போட வேண்டும். தினமும் வேறு வேறு தீவனங்களை மாற்றி மாற்றிக் கொடுப்பது நல்லது. பகல் மூன்று மணிக்குப் பிறகு  ஐந்தரை மணிவரை மேய்ச்சலுக்கு அனுப்பலாம்.

இனபெருக்கம்

* இலாபகரமாக இருக்க ஆடுகள் 2 வருடத்தில் 3 முறை குட்டிகள் ஈன வேண்டும்
* வேகமாக வளரும் தன்மை மற்றும் அதிக எடை கொண்ட ஆடுகளை இனபெருக்கத்திற்கு பயன்படுத்தவேண்டும்
* பெட்டை ஆடுகளை 1 வருட வயதில் இனபெருக்கத்திற்கு பயன்படுத்தவேண்டும்
* குட்டி போட்ட 3 மாதத்திற்கு பிறகு இனச்சேர்க்கை செய்யவேண்டும். அப்போது தான் 2 வருடத்தில் 3 முறை குட்டிகள் ஈனும்
* சினை பருவ காலம் 18-21 நாட்கள் இடைவெளியில் வரும். அது 24-72 மணி காலம் நீடிக்கும்.
* சினை பருவ காலத்தில் பெட்டை ஆடுகள் வலி இருக்க மாதிரி ஓங்கி கத்தும். மேலும் வாலை ஆட்டி கொண்டிருக்கும். இனப்பெருக்க உறுப்புகள் சிறிது வீங்கியும் சிவந்தும் காணப்படும். இனப்பெருக்க உறுப்பிலிருந்து திரவம் ஒழுகவதால் வாலை சுற்றி ஈரமாகவும் அழுக்காகவும் காணப்படும்.சில ஆடுகள் தீனி திங்காமலும் சிறுநீர் அடிக்கடி கழித்து கொண்டு இருக்கும். சில சமயங்களில் மற்ற ஆடுகள் மீது ஏறும் அல்லது ஏற அனுமதிக்கும்
* சினை பருவ அறிகுறிகள் தென்பட்ட 12-18 மணி நேரத்தில் கிடாவுடன் சேர்க்கவேண்டும்.
* சில ஆடுகளில் சினைபருவ காலம் 2-3 நாட்கள் இருக்கும் எனவே அவற்றை இரண்டாவது தடவையாக 1 நாட்கள் கழித்து மீண்டும் கிடாவுடன் சேர்க்கவேண்டும்
* சினை காலம் 145-150 நாட்கள்.

குடற் புழு நீக்கம்

  • ஒல்லியான மற்றும் பொலிவற்ற தோற்ற கொண்ட ஆடுகளில் குடற் புழு தாக்கம் இருக்கும். எனவே அந்த ஆடுகளை இனபெருக்கத்திற்கு முன் குடற் புழு நீக்கம் செய்யவேண்டும்.
  • சினை ஆடுகளை முதல் 2 மாத சினையில் குடற்புழு நீக்க செய்தால் கரு சிதைவு ஏற்பட வாய்ப்புண்டு.
  • சினை ஆடுகளை குட்டி போடுவதற்கு 2-3 வாரத்திற்கு முன் குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும்.
  • குட்டிகள் பிறந்த 30 நாட்களிலும் பிறகு 60 நாளிலும் குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும்

தடுப்பூசிகள்

  • துள்ளுமாரி நோய் மற்றும் டெட்னஸ் தடுப்பூசிகளை குட்டி போடுவதற்கு 4-6 வாரத்திற்கு முன்னும், இனபெருக்கத்திற்கு 4-6 வாரத்திற்கு முன்னும் போடவேண்டும்.
  • துள்ளுமாரி நோய் மற்றும் டெட்னஸ் தடுப்பூசிகளை குட்டிகளுக்கு பிறந்த 8 வது வாரமும், பிறகு 12 வது வாரமும் போடவேண்டும்.
  • கிடாக்களுக்கு வருடம் ஒரு முறை துள்ளுமாரி நோய் மற்றும் டெட்னஸ் தடுப்பூசிகளை போடவேண்டும்.

வெள்ளாடு காப்பீடு திட்டம்

* நான்கு மாதம் வயது முதல் வெள்ளாடுகளை பொது காப்பீடு நிறுவனங்கள் மூலம் காப்பீடு செய்யலாம்.
* விபத்து மற்றும் நோயினால் இறந்தால் காப்பீடு தொகையை கோரலாம்.

வங்கிக் கடன்

ஆடு வளர்ப்பிற்கு அரசு சார்ந்த நிதி நிறுவனங்களும் வங்கிக் கடன் கொடுக்கிறது. வங்கிக் கடன் கொடுக்க முதலில் திட்ட அறிக்கை கேட்பார்கள்.. ஆடு வளர்ப்பிற்கான திட்ட அறிக்கையை,  உங்கள் அருகாமையிலுள்ள கால்நடை ஆராய்ச்சி நிலையத்தை அணுகி, திட்ட அறிக்கையைப் பெற முடியும். ஆடு வளர்ப்பிற்கான பயிற்சியையும் அவர்களிடமே பெற்று , வேண்டிய விபரங்களையும், உதவிகளை பெற முடியும்.இந்த கால்நடை ஆராய்ச்சி நிலையத்தால் நடத்தப்படும் வெள்ளாடு பயிற்சியில் கலந்துகொண்டு அவர்கள் கொடுக்கும் சான்றிதழ்களையும், மாதிரி திட்ட அறிக்கையும் உங்களுக்கு வங்கிக்கடன் வாங்க உதவியாக இருக்கும்.

நன்றி :tamilnadugoatfarms
தகவல்கள் தொகுப்பு :http://www.tamilnadugoatfarms.com/
















மா, தென்னந்தோப்பில் ஆட்டுக் கொட்டகை

"மா, தென்னந்தோப்புக்கு நடுவே, கொட்டில் (பரண்) முறையில் ஆடு வளர்த்தால், விவசாயத்தோடு, ஆடுகளின் மூலம் லாபம் பார்க்கலாம்,'' என்கிறார், வாசுதேவன். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர், தேவி நாயக்கன்பட்டியில் உள்ள "அருவங்காடு' தோட்டத்திற்கு சொந்தக்காரரான வாசுதேவன், கவிதா தம்பதியினர் அனுபவங்களை பகிர்ந்து கொள்கின்றனர்.

பத்து ஏக்கரில் 500 மாமரம், 16 ஏக்கரில் ஆயிரம் தென்னை மரங்கள் வைத்திருக்கிறோம். தென்னைக்கு 20 வயது, மாவிற்கு 15 வயது . 27 அடி இடைவெளியில் தென்னை நட்டோம். ஆண்டுக்கு இரண்டு முறை தொழு உரம், கொழிஞ்சியை இடுவோம். இப்போ ஆட்டுப் புழுக்கை, கொழிஞ்சியா மாத்திட்டோம். வேற ரசாயன உரம் தர்றதில்ல. தேங்காயா விக்காம, கொப்பரையாக்கி, வெள்ளகோவில்ல இருக்குற எண்ணெய் மில்லுக்கு நேரடியா அனுப்பிடுவேன். அன்றைக்கு மார்க்கெட் ரேட்டுக்கு ஏத்தமாதிரி பணம் கிடைக்கும்.


தென்னையில ஆண்டுக்கு ஆறுதரம் காய் பறிக்கலாம். ஆயிரம் மரத்துல, ஒவ்வொரு தரமும் 30ஆயிரம் காய் கிடைக்கும். உரிச்சு உடைச்சு காயவச்சு பருப்பு எடுத்தா 18 டன் கொப்பரை, 18 டன் சிரட்டை கிடைக்கும். ஒரு டன் சிரட்டை 8ஆயிரம் ரூபாய். தேங்காய் மட்டை ஒரு லாரி லோடு 4000 ரூபாய். இந்த வருமானத்தை வைச்சே, தேங்காய் வெட்டுக் கூலி, உரிப்பு கூலி, பருப்பு எடுக்கற கூலியை கொடுத்துடுவேன். கொப்பரையில கிடைக்குறது அப்படியே லாபமாயிடும். ஆண்டுக்கு பத்து லட்ச ரூபாய் வரைக்கும் லாபம் கிடைக்கும். 

25 அடிஇடைவெளியில் அல்போன்சா, பங்கனப்பள்ளி, கல்லாமை, செந்தூரம், கருங்குரங்கு மாமரங்கள் நட்டிருக்கேன். இதுக்கும் ஆண்டுக்கு ரெண்டு தரம் இயற்கை உரம் கொடுப்பேன். இதுல கிடைக்கிற பழங்களை, நேரடியாக பழமுதிர்ச் சோலை நிலையக் கடைகளுக்கு அனுப்புவேன். மா, தென்னையில கிடைக்கற பொருட்களை நேரடியாக அந்தந்த இடங்களுக்கு அனுப்புறதால, போக்குவரத்து செலவு மட்டும்தான், எனக்கு. மத்தபடி மார்க்கெட் கமிஷன், புரோக்கர் கமிஷன் எதுவும் இல்ல. இதனால மார்க்கெட் விலை கிடைச்சாலே, எனக்குப் பெரிய லாபம் தான்.

மா, தென்னைக்கு ஆட்டுப் புழுக்கை வெளியில விலைக்கு வாங்கி, போட்டிட்டு இருந்தேன். எங்க தாத்தா காலத்தில் நூத்துக்கும் மேற்பட்ட வெள்ளாடு, செம்மறியாடு இருந்துச்சு. கூலியாட்கள் பற்றாக்குறையால, எல்லாம் போச்சு. ஆட்டுப் புழுக்கைக்காக, கொட்டில் முறை ஆட்டு வளர்ப்பைத் தேர்வு செஞ்சேன். பத்து ஏக்கரில் தென்னைக்கு ஊடே, ஆடுகளுக்குத் தேவையான கோ 3, கோஎப்.எஸ்.29, வேலி மசால், கிளரிசிடியா பசுந்தீவனங்களை பயிரிட்டுள்ளேன். அடர் தீவனத்திற்காக சோளத்தட்டை, மக்காச்சோளமும் சாகுபடி பண்றேன். எல்லாத்தையும் மெஷினில் வெட்டி தீவனமா கொடுக்கறேன். இதனால, ஆட்களோட எண்ணிக்கையும் கம்மி. 
ஆட்டுப் புழுக்கைகள், தென்னை, மாமரத்திற்கு நல்ல உரமாகுது. அதன்மூலம் தீவனப் பயிர்களும் நல்லா வளருது. தீவனத்திற்கு தனியா வெளியில வாங்க வேண்டிய செலவும் இல்ல, என்றார் வாசுதேவன். 

Wednesday, December 26, 2012


செம்மறி ஆடு வளர்ப்பில் நோய் தடுப்பு பராமரிப்பு

         செம்மறி ஆட்டு இனங்கள் இறைச்சி உற்பத்திக்காகவும் கம்பளத்திற்காகவும் வளர்க்கப் படுகின்றன. இந்தியாவில் 40க்கும் மேற்பட்ட செம்மறி ஆட்டு இனங்கள் உள்ளன. தமிழகத்தில் 8 வகையான செம்மறி ஆட்டு இனங்கள் இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக்குழுமத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் சென்னை சிவப்பு, மேச்சேரி, ராமநாதபுரம் வெள்ளை, கடிக்கரைசல், வேம்பூர் போன்ற ரகங்கள் இறைச்சிக்காக வளர்க்கப்படுகின்றன. கம்பள உற்பத்திக்காக கோயம்புத்தூர்குரும்பை, திருச்சி கருப்பு, நீலகிரி செம்மறி ஆடுகள் வளர்க்கப்படுகின்றன. இவை கம்பளத்திற்காக வளர்க்கப்பட்டாலும் இறைச்சியும் தருகின்றன.
ஆடுகளை மேய்க்கும்போது எல்லா ஆடுகளும் நன்கு மேய்கின்றதா என்று கண்காணிக்க வேண்டும். ஆரோக்கியமான ஆடுகள் மிகவும் ஆவலுடன் தீவனம் உட்கொள்ளும். மேய்ச்சல் தரையில் மேயாமல் நின்றால் அதை கவனிக்க வேண்டும். ஆடுகள் வயிறு நிரம்ப தின்றுவிட்டு மேயாமல் நிழலில் அசைபோட்டுக் கொண்டு நிற்கும். இத்தகைய ஆடுகளுக்கு தகுந்த சிகிச்சை அளிக்க வேண்டும்.

செம்மறி ஆடு வளர்ப்பில் நோய் தடுப்பு பராமரிப்பு:

நச்சுயிரி நோய்களான ஆட்டம்மை, கால்வாய்க் கோமாரிகளைத் தடுப்பூசி போட்டு நோய் வராமல் காத்துவிடலாம். நுண்ணுயிர் நோய்களான துள்ளுமாரி அடைப்பான், சப்பை நோய், தொண்டை அடைப்பான் போன்ற நோய்களை அந்தந்த நோய்களுக்கான தடுப்பூசி போட்டு நோய்களிலிருந்து காத்துக்கொள்ளலாம்.
அக ஒட்டுண்ணி நோய்களுக்கு முறையான குடற்புழு நீக்க மருந்து கொடுக்க வேண்டும். ஆண்டிற்கு 4 முறை குடற்புழு நீக்க மருந்து கொடுக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் குடற்புழு நீக்க மருந்துகளை மாற்றி கொடுக்க வேண்டும். புற ஒட்டுண்ணிகளை நீக்க மருந்து கலந்த நீரில் ஆடுகளை முக்கி எடுத்து நீக்கலாம். அல்லது மருந்து கலந்த நீரை ஆட்டின்மீது தெளித்து நீக்கலாம்.

ஊட்டச்சத்து குறைவு நோய்களை வைட்டமின் நிறைந்த தாது உப்பைக் கொடுத்து பராமரித்து கட்டுப்படுத்தலாம். செம்மறி ஆடுவளர்ப்பு பற்றி விபரங்களுக்கு சேலம் சந்தியூரில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலைய கால்நடை பராமரிப்பு உதவி பேராசிரியை அவர்களை நேரிலோ அல்லது தொலைபேசி மூலமோ (0427-242 2550) தொடர்பு கொள்ளலாம். (தகவல்: முனைவர் ப.சித்ரா, முனைவர் சே.மாணிக்கம், வேளாண்மை அறிவியல் நிலையம், சந்தியூர்-636 204. சேலம். 0427-242 2550)

Friday, November 2, 2012


ஆடு வளர்ப்பு





  • வெள்ளாடுகளை அதிக எண்ணிக்கையில் வளர்க்க சிறந்த முறை பரண் மேல் வளர்க்கும் முறையாகும். 
  • பரண் மேல் ஆடு வளர்ப்பில் ஆடுகள் மரத்தினால் ஆன பரண் போன்ற அமைப்பின் மேல் வளர்க்கப்படுகிறது.
  • பரண் மேல் ஆடு வளர்ப்பு கொட்டகை தரையிலிருந்து உயரமான இடத்தில் குறைந்த்து 4 - 5 அடி உயரத்தில் இருப்பதால் ஆட்டு சாணி மற்றும் சிறுநீர் போன்றவை கீழே சேகரமாகிறது. ஆதலால் தினமும் சுத்தம் செய்யும் பணி மிகவும் குறைவாக இருக்கிறது.
  • பரண் மேல் ஆடு வளர்ப்பு முறையில் வளர்ப்பதால் ஆடுகள் சுகாதரமாகவும் நோய் பரவும் தன்மை குறைவாகவும் இருக்கும்.
  • வெள்ளாடுகளை மேய்ச்சலுக்கு அனுப்பாமல் கொட்டகையிலே பசுந்தீவனம் மற்றும் அடர்தீவனம் அளிக்கப்படுகிறது.
  • வெள்ளாடுகளுக்கு ஏற்ற பசுந்தீவன பயிர்கள்- கோ 3 , கோ 4, கோ எப் எஸ் 29 , அகத்தி, கிளிசீடியா, வேலி மசால்.
  • வெள்ளாடுகளுக்கு அளிக்க வேண்டிய தடுப்பூசிகள் - ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி (PPR ), துள்ளுமாரி நோய் தடுப்பூசி (ET)மற்றும் கோமாரி நோய் தடுப்பூசி (FMD). கால்நடை மருத்துவர்களை அணுகி தகுந்த நேரத்தில் தடுப்பூசிகளை போட்டு கொள்ளலாம்.
  • வெள்ளாடுகளுக்கு குடற்புழுநீக்கம் செய்யும் முறை. --- புதிதாக வாங்கி வரும் வெள்ளாடுகளை தனியாக பிரித்து வைத்து குடற்புழு நீக்கம் செய்த 15 நாட்களுக்கு பிறகே பண்ணை வெள்ளாடுகளுடன் சேர்க்கவேண்டும். குடற் புழு நீக்க மருந்துகளில் பலவகை உண்டு. அவைகளை கால்நடை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் சுழற்சி முறையில் கொடுக்கவேண்டும். அப்போது தான் அனைத்து வகையான குடற்புழுக்களை நீக்கமுடியும். வெள்ளாட்டு குட்டிகள் பசுந்தீவன உண்ண ஆரம்பித்த உடனே குடற்புழுநீக்க மருந்துகளை கால்நடை மருத்துவரின் ஆலோசனை படி சரியான கால இடைவெளியில் கொடுக்கவேண்டும்.
  • பரண் மேல் ஆடு வளர்ப்பு பண்ணை அமைக்கும் முன் ஒன்றுக்கு மேற்பட்ட 3 ஆண்டுகளுக்கு மேல் பராமரிக்கப்பட்டு வரும் பண்ணைகளை பார்வையிடுவதும்  வெள்ளாட்டு பண்ணையாளர்களை கலந்தலோசிப்பதும்  நல்லது.
  • பரண் மேல் ஆடு வளர்ப்பு பண்ணைகளில் ஆடுகளை விடுவதற்கு முன்பே பசுந்தீவன பயிர்களை பயிரிட்டு தயார் நிலையில் வைத்துக்கொள்ளவேண்டும்.
  • Thursday, November 1, 2012


    செம்மறி ஆடு வளர்ப்பு சுயதொழில்


    ஆடு வளர்ப்பு நன்மைகள்:
    ஆடு வளர்ப்பு அனைத்துச் சூழலுக்கும் ஏற்றதாகும். அதிகப் பராமரிப்பு தேவையில்லை. சிறிய இடம் மற்றும் எளிய கொட்டகை போதுமானது.
    குறைந்த முதலீடு மற்றும் உடனடி வருவாய்
    வெள்ளாட்டிலிருந்து பால் மற்றும் கறி ஆகிய இரண்டிலிருந்தும் வருமானம் கிடைக்கிறது.
    ஒரு ஆட்டிலிருந்து சராசரியாக 22-30 கிலோ கறி கிடைக்கின்றது. அனைத்து விதமான மக்களும் உண்ணக் கூடிய இறைச்சி.
    அதிகமான குட்டிகளை ஈனும் விகிதம். ஒவ்வொரு முறையும் சராசரியாக 2-3 குட்டிகளை ஈனுகிறது
    நல்ல எரு கிடைக்கிறது.
    வருடம்முழுவதும்வேலை
    செம்மறி ஆட்டினங்கள்:
    ராமநாதபுரம் வெள்ளை, கீழக்கரிசல், நீலகிரி, திருச்சி கருங்குரும்பை, மேச்சேரி, மெரினோ.
    உள்ளூர் இனங்கள் – இது வெவ்வேறு இடத்தைப் பொறுத்து மாறும்
    · மெரினோ – கம்பளிக்கு உகந்தது
    · ராம்பெளலட் – கம்பளி மற்றும் கறிக்கு ஏற்றது.
    · சோவியோட் – கறிக்கு ஏற்றது
    · செளத் டான் – கறிக்கு ஏற்றது
    நல்ல தரமான இன வகைகள், ஆட்டுத் தொழுவம் அமைப்பது,வளமான செம்மறி ஆடுகள் உற்பத்தி போன்றவற்றைப் பற்றி ஏதேனும் விபரம் தேவைப்பட்டால் அருகில் உள்ள கால்நடை பராமரிப்பு மையத்தையோ அல்லது வேளாண்அலுவலகத்தையோ அணுகவும்.
    நிலம் அதிகமாக இருக்குமெனில், செம்மறி ஆடுகளை மேயவிட்டும், வீட்டில் தொழுவத்தில் பராமரித்தும் வளர்க்கலாம்.வறட்சியான மற்றும் மானாவாரி நிலம் சார்ந்த பண்ணையத்தில்,செம்மறி ஆடு வளர்ப்பு ஒரு முக்கிய அங்கமாக உள்ளது. சிறு மற்றும் குறுநில விவசாயிகள், நிலமற்ற வேளாண் தொழிலாளிகள், குறைந்த முதலீடு செய்து நிறைய லாபம்பெறலாம்.
    நன்மைகள்
    · அனைத்து சூழலுக்கும் ஏற்றதாகும். அதிகப்படியான பராமரிப்பு அவசியம் இல்லை.
    · கறியின் விலை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது
    · உரோமம் கம்பளி தயாரிக்கவும் மற்றும் கறி இறைச்சிக்காகவும் பயன்படுகிறது.
    · சராசரியாக ஒவ்வொரு முறையும் 1-2 குட்டிகள் ஈனுகிறது.
    ·ஒரு ஆட்டிலிருந்து சராசரியாக 22-30 கிலோ கறி கிடைக்கிறது.
    · எருவை சேர்த்து நிலத்தை வளமாக்குகிறது.
    செம்மறியாடு வளர்ப்பு
    செம்மறியாடுகள் எல்லா தட்பவெப்ப சூழ்நிலைகளிலும் வளரும் தன்மை கொண்டவை. அதிகளவு நிலம் கொண்டு பகுதிகளில் திறந்த வெளியில் மேயவிட்டும், இடவசதி குறைவாக உள்ள இடங்களில் பட்டியலில் அடைத்தும் ஆடுகளை வளர்க்கலாம். குறைந்த செலவில் சிறு, குறு நில விவசாயிகள், நிலமற்ற தொழிலாளர்களுக்கு ஆடு வளர்ப்பு இலாபம் தரும் தொழிலாக விளங்குகிறது.
    செம்மறி ஆடு வளர்ப்பின் நன்மைகள்:
    • செம்மறி ஆட்டிலிருந்து இறைச்சி, கம்பளம், தோல் எரு மற்றும் பால் மூலம் வருவாய் கிடைக்கிறது.
    • ஒரு செம்மறி ஆடு ஒரு ஆண்டிற்று 500 முதல் 700 கிலோ எரு உற்பத்தி செய்கிறது.
    • செம்மறி ஆடுகள் புல்லின் மேற்பகுதி மட்டும் மேய்வதால் மேய்ச்சல் தரைகள் அழிவதில்லை. மரங்களையும் இவை அழிப்பதில்லை.
    • செம்மறியாடுகள் மந்தையாகவே நடமாடுவதால் பராமரிப்பு எளிது. 100 ஆட்டிற்கு 1 நபர் போதுமானது.
    • அதிகச் செலவில் கொட்டகைத் தேவையில்லை. திறந்தவெளிகளிலும் பட்டிகளிலும் வளர்க்கலாம்.


    மேலும் செம்மறி ஆடுகள் எல்லா தட்பவெப்ப சூழ்நிலைகளிலும் வளரும் தன்மை கொண்டவை. எடுத்துக்காட்டாக.
    வெப்பப் பிததேசங்களிலும் காணப்படும் ஆடுகள் உடல் வெப்பத்தைத் தணிக்கும் வகையில் கம்பளமில்லாத உரோமத்துடனும், நீண்ட கால்களுடனும், பெரிய வால், காது, கழுத்து அமைப்புக்களுடனும் காணப்படுகின்றன.
    குளிர்ப் பிரதேசங்களில் உள்ள செம்மறி ஆடுகள் உரோமத்துடன் காணப்படுவதால் மழைத்தண்ணீர் உடலில் பட்டு பாதிக்காதவாறு உள்ளன.
    தீவனத் தட்டுப்பாடு உள்ள பிரதேசங்களில் வாழும் செம்மறியாடுகள் தங்களுக்கு தீவனம் சரிவரக் கிடைக்காத காலங்களில் உபயோகித்துக் கொள்வதற்காக கொழுப்புச் சத்தை தாங்கள் உடலில் (வால்) சேமித்து வைத்துக் கொள்ளும் ஆற்றல் பெற்றவை.
    செம்மறி ஆடுகளில் இறைச்சி அளவு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகும்.
    சாதாரணமாக 1-2 குட்டிகள் ஈனும்.
    இவை வயல்வெளிகளில் மேயும் போது இதன் புழுக்கைகள் மற்றும் சிறுநீர் வயலுக்குச் சிறந்த எருவாகப் பயன்படுகிறது.
    (ஆதாரம்: www.indg.in)
    ஆடு மேய்க்கலாம்!
    ஆயிரமாயிரமா சம்பாதிக்கலாம்!
    ஆடு வளர்ப்பது லாபகரமான தொழில் என்பதில் யாருக்கும்எள்ளளவு சந்தேகமும் வேண்டாம். நாம் வளர்க்கும் ஆடுகளைமிக மிக எளிதாக மார்க்கெட்டிங் செய்துவிடலாம் என்பதால், இந்தத் தொழிலில் ஆண், பெண் வித்தியாசமின்றி யார்வேண்டுமானாலும் தாராளமாக இறங்கலாம்.
    கொட்டில் முறையில் நீங்கள் ஆடு வளர்க்கப் போகிறீர்கள்என்றால் உங்களுக்கு சொந்தமான இடத்திலேயே ஷெட்அமைத்து, ஆடு வளர்க்கலாம். அதற்கு உங்களுக்கு இரண்டுஏக்கர் இடம் இருந்தால் போதும். பகலில் வெளியே ஆட்டைமேயவிட்டு, இரவில் கொட்டிலில் அடைத்துவிடலாம். மழைக்காலங்களில் ஆட்டை வெளியே கொண்டு போய் மேய்க்கமுடியாதபோது, உங்களிடம் உள்ள இரண்டு ஏக்கரில் வளரும்பசுந்தீவனத்தை ஆடுகளுக்கு உணவாகக் கொடுக்கலாம்.
    உங்களிடம் நிறைய இடம் இருக்கிறது. மேய்ச்சலுக்காகஆடுகளை வெளியே அனுப்பத் தேவையில்லை என்றால், ஆறு ஏக்கரை முதலில் தனியாக ஒதுக்கிவிடுங்கள். ஆட்டுக்குத் தேவையான பசுந்தீவனத்தை இந்த ஆறு ஏக்கரில்வளர்த்து, சாப்பிடத் தாருங்கள். நீங்கள் ஆடு வளர்க்கும்இடத்தைச் சுற்றி மேய்ச்சல் நிலம் இல்லை என்றால் தனியாகஇடம் ஒதுக்கி, பசுந்தீவனம் வளர்த்து, ஆட்டைப் பராமரிப்பதுதவிர வேறு வழியில்லை.
    கொட்டில் முறையில் வளர்க்கும் போது ஆடுகளுக்கு அடிக்கடிநோய் வர வாய்ப்புண்டு. மேய்ச்சல் முறையில் வளர்த்தால்ஆடுகள் நிறைய அலைய வேண்டியிருக்கும். இதனால்ஆட்டின் உடல் எடை குறையும். இரண்டையும் சம அளவில்கலந்து வளர்க்கப்படும் ஆடுகள், நல்ல உடல் எடையோடுஆரோக்கியமாக இருக்கும்.
    நம்மூரில் நிறைய வகை ஆடுகள் உண்டு. நாட்டு ஆடுகள்வளர்ப்பதற்குச் சிறந்தவை. திருநெல்வேலி மாவட்டத்தில்உள்ள் செங்கனி, பால்கனி அருமையான ஆடு வகைகள். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கொடியாடும் நல்லஇறைச்சி தரக்கூடியவை.
    ஆடுகளை வளர்க்க நிலங்கள் தயார் என்றால், சிலவிஷயங்களை அவசியம் தெரிந்து கொள்வது நல்லது. முதலில் ஆடுகளை சந்தையில் வாங்குவதைவிட, பண்ணைக்கு போய் வாங்குவது நல்லது. இரண்டாவது, உங்களுக்கான பசுந்தீவனத்தை நீங்களே வளர்த்தால்தான்செலவு குறையும். கலப்பினத் தீவனத்தை ஆடுகளுக்குநிறைய தந்தால், நமக்குத்தான் செலவு அதிகமாகும்.
    தொழில் ரீதியில் ஆடு வளர்க்க விரும்புகிறவர்கள், குட்டிஆடுகளை வாங்காமல், ஒன்றரை வயதுள்ள இரண்டுபல்லுள்ள ஆடுகளாகப் பார்த்து வாங்க வேண்டும். அந்த மாதிரிஆடுகள்தான் அடுத்த ஆறு மாதத்தில் குட்டி போடும். பதினைந்து மாதங்களுக்குப் பிறகு நல்ல உடல் எடையோடுஇருக்கும். விற்றாலும் நல்ல விலைக்குப் போகும்.
    ஒரு ஆட்டின் விலை ஆயிரம் ரூபாய் முதல் ஐம்பதாயிரம்ரூபாய் வரை விற்கிறார்கள். எந்த இனத்து ஆடுகளைவாங்குகிறீர்கள் என்பதைப் பொறுத்து ஆட்டின் விலை மாறும்” – அடிப்படையான விஷயங்களை சொல்லிக் கொண்டேபோகிறார் தாமோதரன்.
    ஓரளவுக்கு வருவாய் தரக்கூடிய வகையில் எல்லோரும் ஆடுவளர்க்கிற மாதிரி ஒரு புதிய முறையை பல கிராமங்களில்அறிமுகப்படுத்தி இருக்கிறார் தாமோதரன். இரண்டு ஏக்கர்நிலமும் மூன்று பேர் வேலை பார்க்க்கூடிய ஒருகுடும்பத்துக்கு அல்லது ஒரு குழுவிற்கு 25 அல்லது 50 ஆடுகளைக் கொடுக்கிறார். இதற்காக அவர்கள் ஒரு நயாபைசாகூட கொடுக்க வேண்டியதில்லை. இந்த ஆடுகளைஆரோக்கியமாகப் பராமரித்து, வளர்க்க வேண்டிய வேலைஅவர்களுடையது. ஒரு ஆடு, இரண்டு ஆண்டுகளுக்குள்சராசரியாக மூன்று குட்டிகளை ஈணும். ஐம்பது ஆடுகளைநீங்கள் வளர்க்கிறீர்கள் என்றால் ஏறக்குறைய 150 குட்டிகள்உங்களுக்குக் கிடைக்கும். இதில் 75 குட்டிகளை நீங்களேவைத்துக் கொள்ளலாம். மீதமுள்ள குட்டிகளைதாமோதரனுக்குக் கொடுத்துவிட வேண்டும் என்பதுதான்அக்ரிமெண்ட்.
    ஆடு வளர்க்கும் போது ஒன்றிரண்டு ஆடுகள் இறந்தாலும்அதற்காக அவர்கள் நஷ்டப்பட வேண்டிய அவசியமில்லை. அருகிலுள்ள கால்நடை மருத்துவரிடமிருந்து ஒரு சான்றிதழ்வாங்கிக் கொடுத்தாலே போதும். அதற்கான இன்ஷுரன்ஸைவாங்கிவிடுகிறார் தாமோதரன்.
    “பாரம்பரியமான இந்த முறை நல்ல மேய்ச்சல் நிலம் உள்ளஅனைத்துப் பகுதிகளிலும் அதிவேகமாகப் பரவி வருகிறது. நூறு ஆடுகளை நாம் வளர்க்கும் பட்சத்தில் இரண்டுஆண்டுகளுக்கு ஒருமுறை 2.25 லட்ச ரூபாய் வருமானம்கிடைக்கும். நாங்களே பதிமூன்றுக்கும் மேற்பட்டகிராமங்களில் ஆடுகளைக் கொடுத்து வளர்த்து வருகிறோம்” என்கிறார் தாமோதரன்.
    இன்னும் சில ஆண்டுகளில் கோழி வளர்ப்பு போல, ஆடுவளர்ப்பும் தனிப் பெருந் தொழிலாக வளர்ந்தாலும்ஆச்சரியப்படுவதற்கில்லை.
    தாமேதரனுடன் தொடர்பு கொள்ள விரும்புகிறவர்கள்என்கிற எண்ணுடன் தொலைபேசலாம்.
    கொசுறுத் தகவல் : மகாராஷ்டிராவில் SELF என்கிற ஒருதொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார் தாமோதரன்என்கிற மராத்திக்காரர். கிராமங்களில் ஆடு வளர்ப்பதைஊக்குவிப்பதுதான் இவரது அமைப்பின் வேலை. இந்தஅமைப்பின் ஒரு ஆண்டு டேர்ன் – ஓவர் எவ்வளவு தெரியுமா? 650 கோடி ரூபாய்! 094437-37094
    அறிவியல் ரீதியான ஆடு வளர்ப்பு ஒரு வெற்றிக்கதை:
    என் பெயர் ஐ.நாசர். நான் கோவை மாவட்டத்தில் கோட்டைப்பாளையம் கிராமத்தில் கரூர்வாலா ஆட்டுப்பண்ணை என்ற பெயரில் கடந்த இரண்டு வருடங்களாக அறிவியல் ரீதியாக வெள்ளாடுகள் மற்றும் செம்மறியாடுகளை வளர்த்து வருகின்றேன். முறையாக பயிற்சி பெற்று சிறந்த தொழில் நுட்பங்களைக் கடைபிடித்து பண்ணையை தொடங்குவதற்கு முன்பே பல வகையான பசுந்தீவனங்களைப் பயிரிட்டு அறிவியல் ரீதியாக பராமரித்தால் “ஆடு வளர்ப்பு” ஒரு லாபகரமான தொழில் என்பது நான் அனுபவத்தில் உணர்ந்த உண்மை.
    பசுந்தீவன உற்பத்தி:
    கோட்டைப்பாளையம் கிராமத்தில் மூன்று ஏக்கர் விவசாய பூமியை குத்தகைக்கு எடுத்து கோ 4 கம்பு நேப்பியர் ஒட்டுப்புல், கோ.எப்.எஸ்.29 தீவனச் சோளப்பயிர், வேலி மசால், குதிரைமசால் மற்றும் அகத்தி போன்ற பசுந்தீவனங்களைப் பயிரிட்டேன். ஆடுகளுக்கு தேவைப்படும் பசுந்தீவன அளவை கணக்குப்போட்டு, சிறிய சிறிய பாத்திகளை அமைத்து பசுந்தீவனங்களை முறையாகப் பயிரிட்டு வளர்ப்பதால் ஆண்டு முழுவதும் பசுந்தீவனப் பற்றாக்குறை ஏற்படுவது இல்லை.
    விற்பனை வழிமுறைகள்:
    நான் வியாபாரிகளுக்கு ஆடுகளை அறுப்பதற்கு விற்பனை செய்வதற்கு முன்பே எனது ஆடுகளை எடைபோட்டு, அதிலிருந்து வெட்டிய உடல் எடை எவ்வளவு கிடைக்கும் என்று கணக்குப்போட்டு என்னுடைய ஆட்டின் மதிப்பை தெரிந்துகொண்டு விலை நிர்ணயம் செய்துகொள்வேன். பிறகு வியாபாரியிடம் விற்பனை செய்யும்போது நான் நிர்ணயித்த விலைக்குக் குறைவாக ஆடுகளைக் கொடுக்க மாட்டேன். இவ்வாறு ஆடுகளை விற்பனை செய்வதால் அதிக லாபம் கிடைக்கிறது. மேலும் உயிருடன் ஆடுகளை விற்பதைவிட அவற்றை இறைச்சியாக மதிப்பூட்டி விற்பனை செய்யும்போது மேலும் அதிக லாபம் கிடைக்கும் என்பதை உணர்ந்து ஆடுகளை அறுக்க ஒரு இடத்தை ஏற்படுத்தி, போதிய வசதிகளைச் செய்து, தேவைப்படும்போது, ஆடுகளை அறுத்து இறைச்சியாகவும் விற்பனை செய்கிறேன்.
    மேலும் ஆட்டுப்பண்ணை ஆரம்பிக்க ஆர்வமுள்ள பண்ணையாளர்கள் கீழ்க்காணும் சில முக்கிய விபரங்களை கருத்தில் கொள்ள வேண்டும்.
    ஆட்டுப்பண்ணை தொடங்கும் பண்ணையாளரே அந்தப் பண்ணையின் முதல் வேலையாளாக இருக்க வேண்டும்.
    ஆட்டுப்பண்ணை தொடங்க முதலில் முறையான பயிற்சி அவசியம்.
    பசுந்தீவன உற்பத்தியில் முக்கிய கவனம் செலுத்தி அதிக அளவு பயறுவகை மற்றும் மரவகைப் பசுந்தீவனங்களைப் பயிரிட வேண்டும்.
    உயர்ந்த இனக்கிடாய்களையும், பண்ணை முறையில் வளர்க்கப்பட்ட ஆடுகளையும் தேர்வு செய்து, வாங்கி, பண்ணையை தொடங்க வேண்டும்.
    நோய் தடுப்பு, குடற்புழு மற்றும் ஒட்டுண்ணிகள் நீக்கம் போன்ற பண்ணை நடைமுறைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
    குட்டிகளில் இறப்பைத் தடுக்க, குட்டிகள் பராமரிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
    நாம் வளர்த்த ஆட்டின் மதிப்பைத் தெரிந்துகொண்டு இடைத்தரகர்கள் மற்றும் வியாபாரிகளிடம் ஏமாறாமல் உடல் எடைக்கு ஏற்ப ஆடுகளை விற்பனை செய்தால் அதிக லாபம் கிடைக்கும்.

    பணம் கொட்டும் "ஜமுனாபாரி' ஆடு வளர்ப்பு


        பாலமேடு: பணம் கொட்டும் "ஜமுனாபாரி' ஆடு வளர்ப்பில் மதுரை விவசாயிகள் ஆர்வமாக உள்ளனர். 80 கிலோ எடையுள்ள ஆட்டின் அதிகபட்ச விலை 50 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படுகிறது. பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட ஜமுனாபாரி ஆட்டின் காதின் நீளம் ஒரு அடி; 10 இஞ்ச் அகலம். அழகான தோற்றம் கொண்டது. ஆண், ஆடுகள் ஐந்தடி உயரமும், பெண், ஆடுகள் நான்கடி உயரமும் சராசரியாக வளரக்கூடியது. வளர்ந்த ஆட்டின் எடை 80 கிலோ இருக்கும். ஆட்டின் கறி, மிருதுவாகவும், அதிக சுவையுடன் இருப்பதால் மாமிச பிரியர்களுக்கு ஜமுனாபாரி வரப்பிரசாதகமாக கருதப்படுகிறது.
        ஜமுனா பிரியாணி: முன்னணி அசைவ உணவகங்களில் வான்கோழி பிரியாணிக்கு தனி மவுசு உண்டு. இவ்வரிசையில் ஜமுனாபாரியும் இடம் பிடித்துள்ளது. முன்னணி அசைவ உணவகங்களில் ஜமுனாபாரி மாமிச வகைகளும் இடம் பெறுகிறது.
        ஒரு கிலோ தனிக்கறி 500 ரூபாய் வரை விற்கப்படுகிறது. கறியை விலைக்கு வாங்குவதை விட ஆட்டுக்குட்டிகளை விவசாயிகளிடம் கொடுத்து வளர்ப்போருக்கு அதிக லாபம் கிடைக்கிறது. மதுரையில் அலங்காநல்லூர், பாலமேடு பகுதியில் ஜமுனாபாரி ஆடு வளர்ப்பில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.  ஏற்றுமதிக்கு உகந்தது:ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, ஹாங்காங், தைவான் மற்றும் அரேபிய நாடுகளுக்கு பதப்படுத்தப்பட்ட ஜமுனா ஆட்டுக்கறி ஏற்றுமதி செய்யப்படுகிறது. மதுரையில் வளர்க்கப்படும் ஆடுகள், சென்னை சைதாப்பேட்டைக்கு கொண்டு செல்லப்படுகிறது. 
        அங்கு ஆட்டின் கறியை பதப்படுத்தி "டின்'களில் அடைத்து ஏற்றுமதி செய்கின்றனர். பண்டிகை காலங்களில் கறியும், பாலும் முக்கிய பங்கு வகிக்கிறது. பாலில் அதிக புரதச்சத்து இருப்பதால் குழந்தைகளுக்கு நன்கு காய்ச்சிய பாலை கொடுத்து வந்தால், குழந்தை ஆரோக்கியமாகவும், நோய் எதிர்ப்பு சக்தி மிக்கதாகவும் வளரும் என விவசாயிகள் கூறுகின்றனர். ஈத்துக்கு மூன்று குட்டி: பாலமேட்டை சேர்ந்த ஜமுனாபாரி பண்ணை மேலாளர் பட்டுராஜன், ஆடு வளர்க்கும் ராஜேந்திரன் (45) கூறும்போது, ""ஜமுனாபாரி ஆடுகள் ராஜஸ்தானில் அதிகளவு வளர்கிறது. அதிக உஷ்ணத்தை தாங்கும் திறன் கொண்டது. இதனால், இதில் நோய் எதிர்ப்பு அதிகம். கறியும், பாலும் வாரம் தோறும் சாப்பிட்டு வந்தால் உடல் சூட்டை குறைத்து ஆரோக்கியத்தை வளர்க்கும். ஒரு ஈத்துக்கு மூன்று குட்டிகள் வரை ஈனும். 25 நாள் குட்டி ஒன்றின் விலை 6,000 ரூபாய். 
        கருவுற்ற ஆட்டின் விலை 20 ஆயிரம் ரூபாய். பாசிப்பயறு, துவரை, உளுந்து தூசி மற்றும் கடலை புண்ணாக்கு உணவாக வைக்கப்படுகிறது. வியாபார நோக்கமின்றி சொந்த உபயோகத்துக்காக வளர்க்கிறோம்,'" என்றனர். விவரங்களுக்கு பட்டுராஜன்  மொபைலில் (97866 90370) தொடர்பு கொள்ளலாம்.


    கோழிகளை போல கூண்டுகளில் ஆடுகள் வளர்ப்பு

    பல்லடம் : திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் கோழிப்பண்ணைகள் போல கூண்டுகளில் அடைத்து ஆடுகளை வளர்க்கும் தொழில் பிரபலமாகி வருகிறது. மேய்ச்ச லுக்கு திறந்த வெளியில் ஓட்டிச்செல்ல வேண்டியது இல்லை என்பதால் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். பல்லடம் பகுதிகளில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக கால்நடை வளர்ப்பு தொழிலும் பிரதானமாக விளங்குகிறது. முன்பெல்லாம் ஆடுகளை காலையில் இருந்து மாலை வரை புல்வெளிகளில் மேயவிட்டு இரவானதும் அதற்கான பட்டிகளில் அடைத்து வளர்த்து வந்தனர். அங்கொன்றும் இங்கொன்றுமாய் மேயும் ஆடுகளை பாதுகாக்க கால்கடுக்க ஒருவர் நின்றிருக்க வேண்டும். இவை ஓரளவு வளர்ந்த பிறகு அவை கறிக்காகவும், வளர்க்கவும் விற்பனை செய்யப்படுகிறது.
    ஆனால், தற்போது ஆடு வளர்ப்பிலும் நவீனம் பரவி வருகிறது. பல்லடம் அருகே உள்ள கேத்தனூர், சித்தநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பரண் மேல் ஆடு வளர்ப்பு என்னும் கொட்டில் முறை ஆடு வளர்ப்பு பிரபலமாகி வருகிறது. நிலத்தின் மேல் பரப்பில் அமைக்கப்படும் இந்த கொட்டிலில் பெட்டி பெட்டியாக அறைகள் இரும்பு கூண்டுகள் போல அமைத்து தனித்தனி அறைகள் ஒதுக்கப்பட்டு குட்டிகள், கிடா மற்றும் ரக வாரியான ஆடுகள் வளர்க்கப் படுகிறது. நாட்டு ஆடுகளை தவிர சிரோகி, கரோலி, பீட்டல், தலச்சேரி, போயர் கிராஸ் போன்ற வெளி மாநில ஆடுகளும் வளர்க்கப்படுகிறது.
    கறிக்கோழி வளர்ப்பு போல இந்த பரண் மேல் ஆடு வளர்ப்பு முறை பல விதங்களில் பயன் தருவதால் லாபகரமான தொழிலாக விளங்குவதால் விவசாயிகள் இப்போது ஆடு வளர்ப்பில் ஆர்வம் காட்டுகின்றனர். பார்த்தேன், படித்தேன், வளர்க்கிறேன்... பல்லடம் அருகேயுள்ள கேத்தனூரில் உள்ள ஆட்டுப்பண்ணை உரிமையாளர் ஹரிகோபால் கூறியதாவது:
    தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் சார்பில் திருப்பூரில் நடந்த கால்நடை வளர்ப்பு கருத்தரங்கில் கலந்து கொண்டபோது, பரண்மேல் ஆடு வளர்க்கும் முறையை கேட்டு தெரிந்து கொண்டேன். அதன் அடிப்படையில் சென்னை சென்று பரண்மேல் ஆடு வளர்க்கும் முறை பற்றி மேலும் பல தகவல்களை திரட்டி தற்போது இந்த பண்ணையை தொடங்கியுள்ளேன். பரண் மேல் வளர்க்கப்படும் ஆடுகளுக்கு தீவனம், தண்ணீர் போன்றவை தருவதற்கு அங்கேயே வசதிகள் செய்யப்பட்டுள்ளதால் இந்த முறை ஆடு வளர்ப்பதில் ஆட்கள் அதிகம் தேவையில்லை. தீவனப்புற்களை இயந்திரம் மூலம் சிறிது சிறிதாக நறுக்கி போடுவதால் தீவனங்கள் விரயமாவதில்லை. 
    மேலும் பரண் மேல் ஆடுகளை வளர்ப்பதால் தொற்று பரவாமல் நோயின்றி வளர்கிறது. மேலும் வெட்ட வெளியில் மேயும் ஆடுகள் இனம் மாறி சேர்வதால் கலப்பின ஆடுகள் உருவாகி அது விற்பனையை பாதிக்கிறது. பரண் மேல் வளர்க்கப்படும் ஆடுகளை அதன் இன ஆடுகளோடு இன பெருக்கத்திற்கு விடப்படுவதால் ஆரோக்யமான தரமான குட்டிகள் கிடைக்கிறது.
    இவ்வாறு  வளர்க்கப்படும் ஆடுகளை ஈரோடு, பொள்ளாச்சி, உடு மலை, கோவை போன்ற பகுதிகளைச்சேர்ந்த வியாபாரிகள் இறைச்சிக்காகவும், வளர்க்கவும் பண்ணைகளுக்கே வந்து வாங்கி செல்வதால் ஆடுகளை சந்தைப்படுத்துவதும் சுலபமாக உள்ளது. இதற்கும் மேலாக ஆடுகள் இடும் கழிவுகள் சேதமின்றி பரணுக்கு கீழேயே விழுவதால் குறிப்பிட்ட காலத்தில் கழிவுகளை டன் கணக்கில் விற்க ஏதுவாக உள்ளது என்றார். 

    பரண் மேல் ஆடு வளர்ப்பு


    பரண் மேல் ஆடு வளர்ப்பு

    • வெள்ளாடுகளை அதிக எண்ணிக்கையில் வளர்க்க சிறந்த முறை பரண் மேல் வளர்க்கும் முறையாகும். 
    • பரண் மேல் ஆடு வளர்ப்பில் ஆடுகள் மரத்தினால் ஆன பரண் போன்ற அமைப்பின் மேல் வளர்க்கப்படுகிறது.
    • பரண் மேல் ஆடு வளர்ப்பு கொட்டகை தரையிலிருந்து உயரமான இடத்தில் குறைந்த்து 4 - 5 அடி உயரத்தில் இருப்பதால் ஆட்டு சாணி மற்றும் சிறுநீர் போன்றவை கீழே சேகரமாகிறது. ஆதலால் தினமும் சுத்தம் செய்யும் பணி மிகவும் குறைவாக இருக்கிறது.
    • பரண் மேல் ஆடு வளர்ப்பு முறையில் வளர்ப்பதால் ஆடுகள் சுகாதரமாகவும் நோய் பரவும் தன்மை குறைவாகவும் இருக்கும்.
    • வெள்ளாடுகளை மேய்ச்சலுக்கு அனுப்பாமல் கொட்டகையிலே பசுந்தீவனம் மற்றும் அடர்தீவனம் அளிக்கப்படுகிறது.
    • வெள்ளாடுகளுக்கு ஏற்ற பசுந்தீவன பயிர்கள்- கோ 3 , கோ 4, கோ எப் எஸ் 29 , அகத்தி, கிளிசீடியா, வேலி மசால்.
    • வெள்ளாடுகளுக்கு அளிக்க வேண்டிய தடுப்பூசிகள் - ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி (PPR ), துள்ளுமாரி நோய் தடுப்பூசி (ET)மற்றும் கோமாரி நோய் தடுப்பூசி (FMD). கால்நடை மருத்துவர்களை அணுகி தகுந்த நேரத்தில் தடுப்பூசிகளை போட்டு கொள்ளலாம்.
    • வெள்ளாடுகளுக்கு குடற்புழுநீக்கம் செய்யும் முறை. --- புதிதாக வாங்கி வரும் வெள்ளாடுகளை தனியாக பிரித்து வைத்து குடற்புழு நீக்கம் செய்த 15 நாட்களுக்கு பிறகே பண்ணை வெள்ளாடுகளுடன் சேர்க்கவேண்டும். குடற் புழு நீக்க மருந்துகளில் பலவகை உண்டு. அவைகளை கால்நடை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் சுழற்சி முறையில் கொடுக்கவேண்டும். அப்போது தான் அனைத்து வகையான குடற்புழுக்களை நீக்கமுடியும். வெள்ளாட்டு குட்டிகள் பசுந்தீவன உண்ண ஆரம்பித்த உடனே குடற்புழுநீக்க மருந்துகளை கால்நடை மருத்துவரின் ஆலோசனை படி சரியான கால இடைவெளியில் கொடுக்கவேண்டும்.
    • பரண் மேல் ஆடு வளர்ப்பு பண்ணை அமைக்கும் முன் ஒன்றுக்கு மேற்பட்ட 3 ஆண்டுகளுக்கு மேல் பராமரிக்கப்பட்டு வரும் பண்ணைகளை பார்வையிடுவதும்  வெள்ளாட்டு பண்ணையாளர்களை கலந்தலோசிப்பதும்  நல்லது.
    • பரண் மேல் ஆடு வளர்ப்பு பண்ணைகளில் ஆடுகளை விடுவதற்கு முன்பே பசுந்தீவன பயிர்களை பயிரிட்டு தயார் நிலையில் வைத்துக்கொள்ளவேண்டும்.


    வாழ்க்கைக்கு தேவையான பல நல்ல தகவல்களும், சமுதாயம் சார்ந்த விழிப்புணர்வுகளும், அனைவருக்கும் சென்றடைவது எப்போது? பதிவை வாசிக்கும் உங்கள் கையில் தான் இருக்கிறது . உங்கள் கருத்துகளே என்னை மேலும் செயல்படத் தூண்டும்!!! ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்கும் எதிர்கருத்து உட்பட அனைத்து கருத்துகளும் (தமிழில்) வரவேற்கப்படுகின்றன.

    23 comments:

    1. மிகவும் பயனுள்ள தொழில் சார்ந்த தகவுள் வழங்கி வருவதற்கும் எங்களை போன்றவர்கள் தொழில் தொடங்க முன்வருதற்கும் இந்த பகுதி மிகவும் பயனுள்ளதாக இருந்து வருகிறது.மேலும் உங்கள் பனி தொடர வாழ்த்துக்கள்

      ReplyDelete
    2. Dear Sirs/Madam,

      I have read few articles about goat farm, all are useful information's. thanks for sharing your experience and guiding others.
      I have a doubt,
      Where i can sell the goat? I cannot find articles saying about marketing or market place or purchasers?. If any about knows, kindly post about it. Thank you.

      ReplyDelete
    3. பத்து ஆடுகளுக்கு எத்தனை கிடாய் வேண்டும். மேலும் நாளுசெண்டில் குதிரைமசால் இருந்தால் போதுமானதா.

      ReplyDelete
    4. பத்து ஆடுகளுக்கு எத்தனை கிடாய் வேண்டும். மேலும் நாளுசெண்டில் குதிரைமசால் இருந்தால் போதுமானதா.

      ReplyDelete
    5. தரமான செம்மறி ஆடுகள் விற்பனைக்கு உள்ளது. அனுகவும் 9942299222

      ReplyDelete
    6. தரமான செம்மறி ஆடுகள் விற்பனைக்கு உள்ளது. அனுகவும் 9942299222

      ReplyDelete
    7. எனக்கு ஜமுனாபுரி ஆட்டுக்குட்டிவேண்டடும் 9443985702

      ReplyDelete
    8. சுய தொழில் செய்ய விருப்பமுள்ளவர்கள் மற்றும் பண்ணை சார்ந்த தொழில் செய்ய விருப்பமுள்ளவர்களுக்கு அனைத்து பயிற்சியும் உதவிகளும் செய்துதரப்படும் தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி எண்-9944209238

      ReplyDelete
    9. சுய தொழில் செய்ய விருப்பமுள்ளவர்கள் மற்றும் பண்ணை சார்ந்த தொழில் செய்ய விருப்பமுள்ளவர்களுக்கு அனைத்து பயிற்சியும் உதவிகளும் செய்துதரப்படும் தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி எண்-9944209238

      ReplyDelete
    10. சுய தொழில் செய்ய விருப்பமுள்ளவர்கள் மற்றும் பண்ணை சார்ந்த தொழில் செய்ய விருப்பமுள்ளவர்கள் விரும்பும் முதலீட்டில் கொட்டகை அமைத்து அனைத்து பயிற்சியும் உதவிகளும் சிறந்த முறையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்துதரப்படும் தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி எண்-9944209238

      ReplyDelete
    11. சுய தொழில் செய்ய விருப்பமுள்ளவர்கள் மற்றும் பண்ணை சார்ந்த தொழில் செய்ய விருப்பமுள்ளவர்கள் விரும்பும் முதலீட்டில் கொட்டகை அமைத்து அனைத்து பயிற்சியும் உதவிகளும் சிறந்த முறையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்துதரப்படும் தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி எண்-9944209238

      ReplyDelete
      Replies
      1. வணக்கம் சார்,
        ஆடு பண்ணை தோழில் செய்ய விருப்பம் செல்:8056624640

        Delete
    12. வணக்கம் செ‌ன்னை வாசிக்கும் எங்களுக்கு ஆடு வளர்க்க வாய்ப்புள்ளதா அப்படி என்றால் யாருடன் அணுகுவது

      ReplyDelete
    13. நல்ல தகவல்கள்....... நன்றி ...
      நாங்கள் ஆடு வளர்ப்பு செய்ய ஆவலுடன் உள்ளோம்......... தகுந்த ஒத்துழைப்பு மற்றும் உதவி தேவை 9843434284

      ReplyDelete
    14. எங்களிடம் விவசாயம் செய்ய நிலம் இல்லை ஆடுகள் வளர்க்க மட்டுமே இடம் உண்டு . அனால் ஆடுகள் வளர்க்க ஆசை. வழிகள் உண்டா ? hydroponic grass production முறையில் தீவனம் வளர்த்தால் அது ஆடுகளுக்கு போதுமா ? தகுந்த ஒத்துழைப்பு மற்றும் உதவி தேவை செல் : 8526487778

      ReplyDelete
    15. செம்மறி ஆடுகள் மொத்தமாக தேவை

      ReplyDelete
    16. மிகவும் பயன்தரத்தக்க விபரங்கள்

      ReplyDelete
    17. சுயதொழில் செய்ய விருப்பமுள்ளவர்கள் மற்றும் ஆடு வளர்ப்பு, மாடு வளர்ப்பு, நாட்டுக்கோழி வளர்ப்பு, காடை வளர்ப்பு,மற்றும் மீன் வளர்ப்பு போன்ற பண்ணை சார்ந்த தொழில்கள் செய்ய விருப்பமுள்ளவர்கள் விரும்பும் முதலீட்டில் கொட்டகை அமைத்து அனைத்து பயிற்சியும் உதவிகளும் சிறந்த முறையில் ஏற்பாடு செய்துதரப்படும் தொடர்புக்கு 9944209238

      ReplyDelete